1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (12:13 IST)

நவம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
 
கிரகநிலை: ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ  - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம  ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி  - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய்(வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
 
கிரகமாற்றங்கள்:
04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
அனைவருக்காகவும் பாடுபடும் குணமுடைய மேஷ ராசிக்காரர்களே, இந்த மாதம்  பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை  செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு  இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல்   இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். 
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை  முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை  தவிர்ப்பது நல்லது. 
 
குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன்  வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி  இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. 

கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு  சரியாகும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை  கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம்  தேவை. 
 
பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த சொந்த  வேலை முடியும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பார்கள். 
 
மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். ஆசிரியர் சொல்படி கேட்டு நடப்பது  நன்மையைத் தரும். சக மாணவர்களின் ஆதரவு கிடைக்கும். 
 
அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட  வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். 
 
கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள் குறையும்.
 
அஸ்வினி:
இந்த மாதம்  பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை.  வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை  உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.
 
பரணி:
இந்த மாதம்  நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும்.  பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.  யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம்  நிதானமாக நடக்கும்.
 
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம்  உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம்  ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.  உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள்.   கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.
 
பரிகாரம்:  துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய  தடை அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10.